கோலாலம்பூர்:

பெஜுவாங், பெர்ஜாசா உட்பட பல அரசியல் கட்சிகள் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களை வழங்குமாறு கூட்டணி தலைமைத்துவம் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் குறித்து பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, தகுந்த ஆய்வுகளுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.