உத்தரபிரதேசம்:
பாம்பு கடித்த 13 வயது சிறுவனை, அவனது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பாரம்பரிய சிகிச்சை என்ற பெயரில் கங்கை நதியில் 12 மணிநேரம் கட்டி வைத்தனர்.
ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட அந்த சிறுவன், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இச்சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிருக்கு ஆபத்தான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

