கிள்ளான்:

சிலாங்கூர், கிள்ளான், தாமான் பாயூ பெர்டானாவில் நண்பனின் 9 மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக 37 வயது தொழிற்சாலை மேற்பார்வையாளர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில், வழக்கு விசாரணை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.