தெலுக் இந்தான்:

பேராக், தெலுக் இந்தானில் நேற்று காலை 6.02 அளவில் வீட்டிற்குள் நுழைந்த அரிவாள் ஏந்திய மூன்று மர்ம நபர்கள் 69 வயது முதியவரை வெட்டி சாய்த்ததோடு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு சென்றனர்.

பூஜை செய்து கொண்டிருந்த மனைவியின் கண் முன்னாலேயே இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது.

கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், தகவல் தெரிந்த பொதுமக்கள் போலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.