ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது! -துன் டாக்டர் மகாதீர்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது! -துன் டாக்டர் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, அக்.15-

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீன் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில் சேர்க்கப்பட்ட 2.6 பில்லியன் நன்கொடை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) விசாரணையை மேற்கொள்ளாமல் சிறிய அளவிலான சோதணைகளை செய்து மக்களின் கண்களில் அதனை மூடி மறைக்கும் வரையில் ஊழலை துடைத்தொழிக்கும் அந்த ஆணையத்தின் நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும் என நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

2.6 பில்லியன் பற்றிய விசாரணையை மேற்கொள்ளாமல் ஊழலை முற்றாக துடைத்தொழிப்பதாக பொய் கூற முயற்சிக்க வேண்டாமென அந்த ஆணையத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்ற் நம்பிக்கை கூட்டணியின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற ஊழலுக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

நஜீப் இதற்கு முன்பு தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததோடு பொதுதேர்தலில் தேசிய முன்னணிக்கு உதவுவதற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த அரச குடும்பம் 2.6 பில்லியன் நிதியை தமக்கு அளித்ததாக கூறியிருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டான்ஸ்ரீ அபாண்டி அலி இந்நிதி தொடர்பில் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷ்னல் நிறுவனம் மீதான விசாரணையில் நஜீப் குற்றமற்றவர் என அறிவித்தார்.

இந்த விசாரணையில் தாம் மனநிறைவை அடைவதாகவும் அவை தொடர்பான மூன்று விசாரணை அறிக்கைகளை மூடும்படியும் சட்டத்துறை தலைவரான அபாண்டி அலி உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில் 2013ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரச குடும்பம் 2.08 பில்லியன் நன்கொடையை நஜீப்பின் தனிப்பட்ட வங்கி கணக்கில் சேர்த்ததாகவும் அதில் 2.03 பில்லியன் நிதி திருப்பி ஒப்படைக்கப்பட்டதை அதன் அறிக்கை காட்டுவதாகவும் அபாண்டி அலி சொன்னார்.

இதை உறுதி செய்த சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜூபீர் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் சபாவில் எம்.ஏ.சி.சி. நிதி மோசடி தொடர்பில் 8 பேரை தடுத்து வைத்துள்ளது தொடர்பில் பேசிய துன் மகாதீர், இது தேசிய முன்னணியின் அரசியலுக்காகவும் நம்பிக்கை கூட்டணியை பலவீனபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

எங்களுக்கு பலர் வழங்கி வந்த நிதி ஆதரவுக்கு தடை போடப்பட்டுள்ளதோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் பதற்றமடைய மாட்டோம். நஜீப்பின் தலைமைத்துவம் மக்களின் மரியாதைக்குரிய அவரின் தந்தை துன் அப்துல் ரசாக்கை இழிவுபடுத்துகிறது.

வரும் 14 ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் மக்களின் பணம் திருப்பி கொடுக்கப்படுன் என்றும் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கம் செய்யப்பட்ட பொதுச்சேவை ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என துன் மகாதீர் உறுதியளித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன