வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஜாக்கிமுடனான தொடர்பை முறித்துக்கொள்ள ஜொகூர் சுல்தான் உத்தரவு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜாக்கிமுடனான தொடர்பை முறித்துக்கொள்ள ஜொகூர் சுல்தான் உத்தரவு!

பத்துபகாட், அக்.15-
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவுடனான (ஜாக்கிம்) தொடர்பை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி ஜொகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் ஜொகூர் சமய துறையான ஜாய்ஜ் அமைப்புக்கு உத்தரவிட்டார். ஜொகூர் மாநிலத்திலுள்ள முஸ்லிம் சமய பிரச்சாரங்கள் தொடர்பாக சோதனைகளை நடத்தும்படியும் அவர் ஜாய்ஜுக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு, மாநில கொள்கைக்கு அவர்கள் பொருத்தமற்றவர்கள் என தெரியவந்தால் அவர்களுடைய அங்கீகாரத்தை மீட்டுக்கொள்ளும் படியும் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இனி எந்த விவகாரமாக இருந்தாலும் கூட்டரசு அரசாங்க இலாகாவான ஜாக்கிமுடன் கலந்து பேசவேண்டாம். அவர்களுடன் பேசி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்றும் அவர் சொன்னார். முஸ்லிம்களுக்கு மட்டும்…, என்ற அறிவிப்புப் பலகையுடன் சலைவை மையம் நடத்தப்பட்டதற்கு ஜொகூர் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு முரணாக பிரச்சாரம் செய்த ஜாக்கிம் அமைப்பின் முன்னாள் அதிகாரியான ஷாமிஹான் மாட் ஜின்னின் போக்கையும் ஜொகூர் சுல்தான் கண்டித்தார்.

ஷாமிஹானின் பேச்சு திமிர்த் தனத்துடன் உள்ளது. அவர் மற்ற இனத்தவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால், பலர் கோபமடைந்துள்ளனர். ஆனால், நான் அப்படியெல்லாம் பேசவில்லை என்று இப்போது அவர் மறுத்து இருக்கிறார். இந்த சமய போதகர் பொய் சொல்லுவதிலும் கெட்டிக்காரர் போல இருக்கிறது. இவரிடமிருந்து நாம் எப்படி நல்லதை கற்றுக் கொள்ளமுடியும்? என்றும் ஜொகூர் சுல்தான் வினவினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன