அம்பாங்:
சிலாங்கூர், அம்பாங், தாமான் செராயா சூராவில் அஸான் ஓதுவதற்கோ அல்லது வெள்ளிக்கிழமை தொழுகைக்கோ தான் தடை விதிக்கவில்லை என தெரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குடியிருப்பாளர்களுக்கும் சூராவிற்கும் இடையே நிலவும் பிரச்சினையைத் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக அவர் போலிஸ் புகார் அளித்துள்ளார்.

