மூவார்:
ஜொகூர், ஜாலான் மூவார் – பத்து பாஹாட், கிமீ 136-இல் நேற்று மதியம் 12.30 அளவில் லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த புகழேந்தி பாவேந்தனும் அவரது நண்பரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்று மதியம் 12.30 மணியளவில், வலதுபுறம் திரும்ப முயன்ற லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்தது.
உயிரிழந்த இருவரும் 21 வயதுடைய பட்டு பாஹாட் உயர் தொழில்நுட்ப பயிற்சி மைய (ADTEC) மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்து சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் (HSNI) தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
46 வயதுடைய லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

