கல்வியால் மேம்படுவோம்!!! – டத்தோ கமலநாதன்

ஓளியூட்டும் இந்த தீபத் திருநாளில், கல்வியால் மேம்பட்ட இந்திய சமுதாயமாக நாம் அனைவரும் உருமாற வேண்டுமென்று கல்வித் துறை துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன் வலியுறுத்தினார்.
கல்வி கற்ற சமுதாயமே சவால்களை எதிர்கொள்ளும் மன ஆற்றலை கொண்டிருக்கும். அந்த ஆற்றல் நமது சமுதாயத்தில் அதிகமாக இருந்தால், அது நமது ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வழிகாட்டலாக அமையும்.

இந்த நல்ல நாளில், ஒற்றுமை கொண்ட சமூகமாக நாம் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.