ஈப்போ:
மலேசிய இந்தியர் காங்கிரஸ் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.ஆர்.சி. புந்தோங் மைதானத்தில் சிறப்புடன் பெனால்டி கிக் கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், பத்து காஜா ஆகிய தொகுதிகளுடன் இளைஞர் பகுதியினர் ஏற்பாட்டில் புந்தோங் ஐ. ஆர். சி. மைதானத்தில. நடைபெற்றது.
இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியைப் பற்றி கருத்தரைத்த பேரா ம.இ.கா. இளைஞர் தலைவர் தியாகேஸ் கணேசன் போட்டிக்கான ஏற்பாடுகள் வெறும் ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சுமார் 250 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு அணியிலும் ஐந்து விளையாட்டாளர்கள் இடம்பெற்றிருந்ததாதகவும், புந்தோங் பகுதியில் இளைஞர்களிடையே ம.இ. காவிற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் இருப்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ம.இ.கா. 80 ஆண்டுகளாக நாட்டின் இந்திய சமூக முன்னேற்றத்திற்காக சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களை மேலும் நெருக்கமாக இணைக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், தேசிய இளைஞர் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், பல்வேறு பிரிவுகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இளைஞர் அணியினரின் ஒத்துழைப்புடன் இந்த போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

