கோலாலம்பூர்:
பிற இனத்தவருக்கு ஈடாக இந்தியர்கள்
தேசிய பொருளாதார நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றி வரும் இந்தியர்கள் இதன் பிரதான பொருளாதார நீரோட்டத்தில் அவசியம் இடம் பெற வேண்டும் என்று மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி வலியுறுத்தினார்.
தற்போது மருத்துவ துறை அனைத்து இன மக்களுக்கும் 1 வெள்ளி கட்டணம் விதிக்கிறது. இத்தகு சரிசமமான நிலை அனைத்து துறைகளிலும் விரிவாக்கம் காணப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்று சனிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
தற்போது இந்தியர்களுக்கான வாய்ப்புகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவதற்கான சரியான தலைமைத்துவம் இல்லாததை வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.
நாட்டிலுள்ள இந்திய அரசியல் கட்சிகள் யாவும் ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் மூத்த இந்திய கட்சியான மஇகா தலைமையில் இது செயல்பட வேண்டும் என்று 13ஆவது பட்ஜெட் மீதான விவாதத்தின்போது தான் அழைப்பு விடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
பொய்யான வாக்குறுதிகளை நம்பியிராமலும் மாயையான அரசியல் வாக்குறுதிகளிலிருந்து வெளிவரும்படியும் இந்தியர்களுக்கு ஆலோசனை கூறினார்.
இதனிடையே,
ஜொகூர், நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலத் தேர்தல்களில் இக்கட்சி கவனம் செலுத்தாது என்றும் தங்கள் இலக்கு யாவும் அடுத்தப் பொதுத் தேர்தலே என்றும் அவர் விவரித்தார்.

