முகப்பு > சமூகம் > பத்துமலை வளாகத்தில் ம.இ.கா.வின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பத்துமலை வளாகத்தில் ம.இ.கா.வின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!

கோலாலம்பூர், அக்.17-

ம.இ.காவின் தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நாளை புதன்கிழமை காலை மணி 8.30 தொடங்கி பிற்பகல் மணி 12.30 வரையில் பத்துமலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி, அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ஹாமிடா காமிஸ், இந்தியா மற்றும் தெற்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் டாக்டர் சாமிவேலு, கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தேசிய துணைத்தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, உதவித்தலைவர்களான செணட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், தேசிய பொருளாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி உள்பட ம.இ.காவின் உயர்மட்ட தலைவர்களும் அமைச்சர்களும் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதாக ம.இ.காவின் தேசிய பொதுச்செயலாளர் டத்தோ சக்திவேல் தெரிவித்தார்.

ம.இ.கா.வின் வருடாந்திர நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது இந்த திறந்த இல்ல உபசரிப்பு. பல வகையான உணவு வகைகளுடன் உள்ளூர் கலைஞர்களின் இசைநிகழ்ச்சியுடன் இந்த விழா நடைபெறவுள்ளது. உள்ளூர் மக்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் இவ்விழாவில் கலந்துக்கொள்வார்கள்.

அவ்வகையில் இவ்விழாவில் சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ளும்படி டத்தோ சக்திவேல் கேட்டுக்கொண்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன