அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சலின் தேர்தலில் மலேசியா தோல்வி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சலின் தேர்தலில் மலேசியா தோல்வி

கோலாலம்பூர், அக். 20-

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சலின் 15 இடங்களில் ஓர் இடத்தைப் பிடிப்பதில் மலேசியா மீண்டும் தோல்வி கண்டுள்ளது. அது ஆப்கானிஸ்தான், நேப்பாளம், பாகிஸ்தான், கட்டார் ஆகிய நாடுகளுடன் தோல்வி கண்டது.

கட்டார் இரண்டாவது முறையாக மலேசியாவைவிட கூடுதல் வாக்குகளைப் பெற்று ஐ.நா.சபையில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.ஆண்டுக் கூட்டத்தில் நடைபெறும் தேர்தலின்போது அதில் உறுப்பியம் பெற்றுள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 15 இடங்களுக்கானப் பதவிகளை தேர்வு செய்வார்கள்.

இம்முறை ஆப்கானிஸ்தான், அங்கோலா, ஆஸ்திரேலியா, சில்லி, கோங்கோ குடியரசு, மெக்சிகோ, நேப்பாளம், நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, கட்டார், செனேகல், ஸ்லோவாகியா, ஸ்பான்யோல், உக்ரேன் ஆகிய நாடுகள் தேர்வு பெற்றன. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் வரும்2018 ஜனவரியிலிருந்து 1.1.2020ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஐ.நா.வின் உறுப்பியம் பெற்றிருக்கும்.

ஐ.நா.மன்றத்தில் உறுப்பியம் பெறுவதற்கு மலேசியா மூன்றாவது முறையாகத் தோல்வி கண்டுள்ளது. கடந்த 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும், 2010 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலும், 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை மலேசியா தோல்வி கண்டுள்ளது. மலேசியாவிற்கு 129 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

15 இடங்களுக்குப் போட்டியிட்ட 16 இடங்களில் மலேசியா மட்டுமே தோல்வி கண்டது. மாலைத்தீவு இறுதி நேரத்தில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன