தேசிய முன்னணியின் பாரம்பரிய தொகுதிகளில் பெரும் மாற்றம்?

0
4

பெட்டாலிங் ஜெயா, அக். 21
வருகின்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற வேண்டும் என்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இலக்குகளில் ஒன்றாகும். இன்று நடைபெற்ற தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்களுக்காக நடைபெற்ற தேர்தலுக்கு முந்திய கூட்டமொன்றில், நஜீப் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது குறித்து குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது மிக முக்கியம் என்பதை நஜீப் வலியுறுத்தினார், என அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுங்கை புசார் அம்னோ தலைவர் புடிமான் முகமட் சோதி தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்யப் போவதாகவும் நஜீப் கூறியிருக்கிறார். தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் அவை பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்த இடங்களிலேயே தொடர்ந்து போட்டியிடுவது உறுதியல்ல என்றார்.

கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் அப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்று கூறிய சிலாங்கூர் அம்னோ தொடர்புத் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார், இப்போது அதை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நஜீப் குறிப்பிட்டுள்ளார். தலைவர் கூறியதுபோல் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. எந்தவொரு இடமும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்குச் சொந்தமானதல்ல.

ஒரு தொகுதிக்குப் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களால் அத்தொகுதியில் வெல்ல முடியுமா, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது என்று நோ தெரிவித்தார்.