பெட்டாலிங் ஜெயா, அக். 21-
நம்பிக்கை கூட்டணியின் மகளிர் பிரிவில் மேலும் 4 புதிய நியமனங்களை அதன் தலைவர் ஜூராய்டா கமாருடின் தெரிவித்தார்.  இக்கூட்டணியின் மகளிர் பிரிவை முழுமைப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக இன்று பி.கே.ஆரின் தலைமையகத்தில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் மகளிர் பிரிவின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

அவ்வகையில், சட்ட பிரிவின் தலைவராக ஜி.சிவமலர், தொடர்பு பிரிவு தலைவராக கஸ்தூரி பட்டு, சபா மாநில விவகாரங்களுக்கான தலைவராக ஜென்னி லாசிம்பாங், சரவாக் மாநில விவகாரங்களுக்கான தலைவராக வூன் ஷாய்க் நீ ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டவர்களாவர்.

இதற்கு முன்னர் நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றம் அக்கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் மூன்று நியமனங்களை அறிவித்திருந்தது.  அக்கூட்டணியின் பொதுத்தேர்தல் குழு தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு உதவியாக பொதுத்தேர்தல் இயக்குநராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் தொடர்பு மற்றும் அணி திரட்டும் பிரிவிற்கு முஹம்மட் சாபுவும் மகளிர் பிரிவின் தலைவியாக ஜூராய்டா கமாருடினும் நியமிக்கப்படுவதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்திருந்தார்.