புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ம.இ.காவிற்கும் தேசிய முன்னணிக்கும் நன்மையளிக்குமானால் தொகுதி மாற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ம.இ.காவிற்கும் தேசிய முன்னணிக்கும் நன்மையளிக்குமானால் தொகுதி மாற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்!

பெஸ்தாரி ஜெயா, அக். 22-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா. அதன் பாரம்பரிய சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அதேவேளையில், ம.இ.காவிற்கும் தேசிய முன்னணிக்கும் நன்மையளிக்கும் பட்சத்தில் தொகுதி மாற்றங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்து இருப்பதாக அவர் மேலும் சொன்னார். ம.இ.கா.விற்கும் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பரிமாற்றமானது இரண்டு தரப்புகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மாறாக, அதில் ஒரு தரப்புக்கு தோல்வி ஏற்படும் வகையில் அது இருக்க கூடாது.

எங்களின் கொள்கை எப்போதும் ஒன்றே. அதாவது, இதற்கு முன்னர் நாங்கள் போட்டியிட்டது போல எங்களின் பாரம்பரிய தொகுதிகளிலேயே போட்டியிட விரும்புகின்றோம். தொகுதி மாற்றத்திற்கு காரணங்கள் இருக்குமானால், அது இரு தரப்பிற்கும் நன்மையளிப்பதாகவே இருக்க வேண்டும். மற்ற தரப்பினர்கள் தொகுதிகளை மாற்றிக்கொள்வதாக இருந்தால், நாங்கள் அவர்களுடன் உட்கார்ந்து பேச தயாராக இருக்கிறோம். ஆனால், அது வெற்றியை தரக்கூடிய தொகுதி மாற்றங்களாக இருக்க வேண்டும். ம.இ.காவை பலிகொடுக்கும் வகையில் இருக்கக்கூடாது. இதுவரையில் தொகுதி பங்கீடுகள் குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை. நேரம் வரும்போது அது குறித்து ஆராய்வோம் என டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன