புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மலேசிய ஏர்லைன்ஸ் விவகாரங்களில் நஜீப் தலையிட்டாரா?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் விவகாரங்களில் நஜீப் தலையிட்டாரா?

கோலாலம்பூர், அக். 22-
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விவகாரங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலையிட்டதால்தான் தாம் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியதில் உண்மையில்லை என எம்.ஏ.எஸ்சின் முன்னாள் செயல்முறை அதிகாரி பீட்டர் பெல்லீவ் தெரிவித்தார். நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அப்பொறுப்பிலிருந்து விலகியதாகவும் அவர் கூறினார்.

1981ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் இந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக பெரிய பங்கினை ஒரு தலைவராக ஆற்றியுள்ளார். ஆனால், நஜீப்பின் தலையீட்டால்தான் நான் எம்.ஏ.எஸ்சின் தலைமை செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து விலகியதாக அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டில் 100 சதவிகிதம் உண்மையில்லை என இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பீட்டர் பெல்லீவ் சொன்னார். தாம் பதவி விலகியதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய துன் மகாதீர் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

எம்.ஏ.எஸ்சின் தலைமை செயல்முறை அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போது யாரும் அதன் நிர்வாகத்தில் தலையிடவில்லை. நான் என்னுடைய சொந்த நாடான அயர்லாந்திற்கு செல்ல விரும்பியதால் அப்பதவியிலிருந்து விலகினேன். இதில் எந்த மர்மமும் சதியும் சர்ச்சைகளும் இல்லை என பீட்டர் பெல்லீவ் கூறினார்.

முன்னராக, துன் டாக்டர் மகாதீர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வலைபதிவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போயிங் விமானங்களை வாங்கும் விவகாரம் உள்பட அதன் நிர்வாக விவகாரங்களில் நஜீப் தலையிட்டதால்தான் பீட்டர் பெல்லீவ் அப்பதவியிலிருந்து விலகியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு விளக்கம் தரும் வகையில் பீட்டர் பெல்லீவ் மேற்கண்டவாறு சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன