அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > புதிய வாக்காளர்களாக 2 லட்சத்து 29ஆயிரத்து 919 பேர் பதிவு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

புதிய வாக்காளர்களாக 2 லட்சத்து 29ஆயிரத்து 919 பேர் பதிவு!

புத்ராஜெயா, அக்.23-
2017 மூன்றாம் காலாண்டுக்கான பதிவு காலத்தில் தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்) 2 லட்சத்து 29ஆயிரத்து 919 புதிய வாக்காளர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சுமார் 65 ஆயிரத்து 83 பேர் தங்களது வாக்களிப்பு மையங்களை மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2017 மூன்றாம் காலாண்டுக்கான கூடுதல் வாக்காளர் பதிவு மசோதா இன்று தொடங்கி நவம்பர் 6 ஆம் தேதி வரை நாடு முழுமையும் உள்ள 960 இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார். இக்கால கட்டத்தில் இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்டு மற்றும் செம்டம்பரில் புதிதாகத் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொண்டவர்களும் வாக்களிப்பு மையங்களின் முகவரியை மாற்றியவர்களும் தங்கள் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளும்படி அறிக்கை ஒன்றின் வழி அவர் ஆலோசனை கூறினார்.

இந்தக் கூடுதல் வாக்காளர் பதிவு மசோதா 15 மாநில தேர்தல் அலுவலகங்கள், 437 கணினி தபால் நிலையங்கள், 87 மாநில அலுவலகங்கள், 166 மாவட்ட நில அலுவலகங்கள், 82 மாவட்ட மன்றங்கள், 158 பல்நோக்கு- தெதாங்கா மண்டபங்களோடு இதர 16 இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும் என்று அப்துல் கனி மேலும் சொன்னார். இந்த வாக்காளர் பதிவு பட்டியலில் தங்களின் பெயர் இடம் பெறவில்லை என்று கண்டறிவோர் பி பாரத்தைப் பயன்படுத்தி கோரிக்கை விடுக்கலாம். பூர்த்தி செய்த பாரத்தை மேற்குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் வேலை நாள்களில், அலுவலக நேரத்தில் மாநில தேர்தல் இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன