முகப்பு > கலை உலகம் > 2.0-இல் கமல்ஹாசனா? மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்திய ரசிகர்கள்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2.0-இல் கமல்ஹாசனா? மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்திய ரசிகர்கள்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவின் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து இந்த நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்களுக்கு அது ஒரு நேரடி இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேமில்லை. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசான் கலந்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2.0 படத்தை அடுத்து ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை கமலை வைத்து எடுக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஷங்கரே நேரடியாக அறிவித்தார். இப்படத்தை ஏற்கனவே தில் ராஜூ தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 2.0 படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே இந்தியன் 2 படத்தை தயாரிக்கவுள்ளது. இதன் அடிப்படையில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டில் கமல் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

`2.0′ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன