முகப்பு > விளையாட்டு > இங்கிலாந்து லீக் கிண்ணம் – பினால்டியால் தலை தப்பியது மென்செஸ்டர் சிட்டி!
விளையாட்டு

இங்கிலாந்து லீக் கிண்ணம் – பினால்டியால் தலை தப்பியது மென்செஸ்டர் சிட்டி!

லண்டன், அக்.25 –

இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி பினால்டி கோல்களில் வோல்வர்ஹாம்ப்டன் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.அதேவேளையில் அர்செனல் கூடுதல் நேரத்தில் 2 – 1 என்ற கோல்களில் நோர்விச் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

செவ்வாய்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 180 நிமிடங்களில் வோல்வர்ஹாம்ப்டன் அணிக்கு எதிராக கோல் போடுவதில் திணறியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் கடந்த மூன்று ஆட்டங்களில் 16 கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்த மென்செஸ்டர் சிட்டி, இரண்டாம் டிவிஷனை சேர்ந்த வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிராக கோல் போடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியது.

90 நிமிட ஆட்டத்திலும், கூடுதல் நேரத்திலும் கோல் போடப்படாததால் வெற்றியாளரை முடிவு செய்ய பினால்டி வழங்கப்பட்டது. இதில் மென்செஸ்டர் சிட்டி கோல் காவலர் கிலாடியோ பிராவோ இரண்டு பினால்டிகளை தடுத்து நிறுத்தி 4 – 1 என்ற பினால்டி கோல்களில் மென்செஸ்டர் சிட்டிக்கு வெற்றியை பரிசளித்தார்.

இதனிடையே எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நோர்விச் முதல் கோலைப் போட்டு அர்செனலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனினும் மாற்று ஆட்டக்காரராக நுழைந்த 18 வயதுடைய எடி நிக்கேத்தியா இறுதி நிமிடங்களில் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார். கூடுதல் நேரத்தில் நிக்கேத்தியா போட்ட இரண்டாவது கோலால் அர்செனல் வெற்றி பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன