கோலாலம்பூர், அக். 25-
பெட்ரோல் விலை 3 காசும் டீசல் விலை 2 காசு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.17 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.20 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.47 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 2.50 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் 2.11 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை 2.13 காசுக்கு விற்கப்படும். இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு மணி 12.00 தொடங்கி நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.