திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > துபாயில் நடைபெற உள்ள  ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் ! 
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

துபாயில் நடைபெற உள்ள  ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் ! 

சென்னை: இயக்குனர் ஷங்கர் திரைக்கதையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாளை மறுதினம் துபாயில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 2.0. பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் பார்ட் 2வாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. எமிஜாக்ஷன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் ரஜினிகாந்த்தின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

சுமார் 400 கோடியில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2.0 திரைப்படம் 2018 ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டும் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம் என்று 2.0 பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாமல் காட்சியாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் சில வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.

துபாயில் பாடல் வெளியீட்டு விழாவிற்கு மட்டுமே ரூ. 12 கோடி செலவிடப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பாடல் வெளியீட்டு மேடையிலேயே ரசிகர்களுக்கு இசை விருந்தும் அளிக்க உள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் மற்றும் இரு மகள்களும் சென்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன