அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. பலரும் சிவாவுடன் இன்னும் கொஞ்சம் கேப் விட்டு இணையலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால், அஜித் முடிவு தான் உறுதி, அவர் சிவாவை டிக் அடித்தால் அவர் தான் இயக்குனர், நாம் முன்பே அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க சிவா, விஷ்ணுவர்தன், கே.வி.ஆனந்த் லிஸ்டில் உள்ளதாக கூறினோம்.

அந்த வகையில் தற்போது விக்ரம் வேதா என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தை கொடுத்த புஷ்கர் காயத்ரியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. அஜித்திற்காக அவர்களும் கதை சொல்ல ரெடி என தெரிகின்றது, அஜித் முடிவு என்ன என்பதை இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் தெரிந்துவிடும்.