கோலாலம்பூர், அக்.27-

பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை , 2018 ஆம் ஆண்டிலும் தொடரப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆயிரம் ரிங்கிட்டைக் காட்டிலும் அந்த தொகை  2018 ஆம் ஆண்டில் 1, 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என நஜிப் அறிவித்தார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் ரிங்கிட்டும், ஈ காசே திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு 1, 050 ரிங்கிட்டும் , மூவாயிரம் முதல் நான்காயிரம் ரிங்கிட் வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு 800 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டில் வழங்கப்பட்ட பிரிம் உதவித் தொகைக்கு 680 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட வேளையில், 70 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.