முகப்பு > மற்றவை > நம்பிக்கை கூட்டணியின் பட்ஜெட்டை தேசிய முன்னணி காப்பியடித்துள்ளது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியின் பட்ஜெட்டை தேசிய முன்னணி காப்பியடித்துள்ளது!

கோலாலம்பூர், அக். 28-
நம்பிக்கை கூட்டணி அறிவித்த 2018ஆம் ஆண்டிற்கான நிழல் வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) தேசிய முன்னணி காப்பியடித்துள்ளதாக முன்னாள் பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் குற்றம் சாட்டினார்.

இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ள அவர், அதில் நம்பிக்கை கூட்டணி நாட்டில் அனைத்து டோல்களையும் அகற்றுவது, ஜி.எஸ்.டி. ரத்து, பிரசவ விடுமுறை 120 நாள்கள், கடந்த 8 ஆண்டுகளாக சிலாங்கூரில் அமல்படுத்தப்பட்டு வரும் தாவாஸ் திட்டம், பெட்ரோலுக்கு உதவித்தொகை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது.

இதை காப்பியடித்துள்ள தேசிய முன்னணி வெறும் 5 டோல் கட்டணங்களை ரத்து செய்ததோடு குறிப்பிட்ட விவகாரங்களில் அதாவது வாசிப்பு நூல்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்கியிருப்பதோடு பிரசவ விடுமுறையை 90 நாட்களாக வழங்குகின்றது.

அதோடு, தாவாஸ் திட்டத்தை போன்று புதிதாக அடாம்50 திட்டத்தை அமல்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பீட்டை டிவி3 தொலைக்காட்சியும் உத்துசான் நாளிதழும் மேற்கொள்ளாது காரணம் மக்கள் நம்பிக்கை கூட்டணியுடன் இருப்பார்கள் என அவர்கள் அஞ்சுவதாக துன் டாக்டர் மகாதீர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன