செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 2018 பட்ஜெட் தாக்கலில் தே.மு. சின்னமா? விசாரணை துரிதபடுத்துங்கள்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

2018 பட்ஜெட் தாக்கலில் தே.மு. சின்னமா? விசாரணை துரிதபடுத்துங்கள்!

பெட்டாலிங் ஜெயா, அக்.30-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தாக்கல் செய்த 2018க்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) ஒளிபரப்பப்பட்ட மக்களவைத் தொலைக்காட்சியின் திரையில் தேசிய முன்னணியின் சின்னம் இடம் பெற்றிருந்தது தொடர்பில் விசாரணையை துணை சபாநாயகர் துரிதப்படுத்த வேண்டும் என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு வலியுறுத்தினார்.

இந்த 2018ஆம் ஆண்டு பட்ஜெட் உண்மையில் நாட்டுக்கும் மக்களுக்கும்தானே தவிர தேசிய முன்னணிக்கு அல்ல. இதில் எங்களை மக்கள்தான் தேர்வு செய்திருக்கின்றனர். ஆனால் இந்த பட்ஜெட் தேசிய முன்னணியின் பட்ஜெட்டாகத்தான் உள்ளதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி கூறினார்.
இந்நடவடிக்கை உண்மையில் பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது. இதில் பட்ஜெட் தாக்கலின் போது தொலைக்காட்சியில் ஒளியேற்றப்பட்ட போது தேசிய முன்னணியின் தராசு சின்னம் இடம் பெற்றிருந்தது.

இந்தத் தவற்றுக்குப் பின்னணியாக யார் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இது பற்றிய விசாரணையை தொடங்குவதற்கு சபாநாயகரும் இணக்கம் தெரிவித்து விட்டார். இவ்விவகாரம் குறித்து அச்சமயத்தில் மக்களவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களுக்கே தெரியாது என கஸ்தூரி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன