புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சொந்த தாயிடம் மகளை படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்திய இந்திய ஆசிரியர்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சொந்த தாயிடம் மகளை படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்திய இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக். 31-

ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் சாஹாயா கிளையின் தலைவர் என்றும் நம்பப்படும் நடராஜா எனும் நபர் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் அப்பெண்ணை தன்னுடன் படுக்கைக்கு அனுப்பும்படியும் பாலியல் தொந்தரவு செய்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் தாயிடம் முறைகேடாக பேசும் தொலைப்பேசி உரையாடல் தற்போது வாட்சாப்பில் பெரும் வைரலாகி வருகின்றது. அதில், அப்பெண்ணின் தாய் அரிசி வாங்குவதற்காக கடைக்கு செல்லவிருப்பதாகவும் தனது மகள் தோழியிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆசிரியரிடம் கூறுகிறார். ஆனால், அந்த ஆசிரியர் அப்பெண் தன்னுடன் படுக்கைக்கு இணங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பெண்ணின் தாயாரிடம் விடாப்பிடியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

இவ்விவகாரம் தொடர்பில், அனேகன்.காம் இணையத்தள பதிவேடு பெஸ்தாரி ஜெயாவுள்ள சிலரை தொடர்பு கொண்டு பேசிய போது, அந்த ஆசிரியர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இந்திய பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு வேலை வாங்கி தருவதாகவும் உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்களுக்கு பாலியல் தொந்தரவை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவரது இந்த நன்னெறியற்ற செயலின் காரணமாக அவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் கடுமையாக தாக்கியதாகவும் ஆனால் அவர் இன்னமும் திருந்தாமல் இப்படியே இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை சுமத்தினர்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அரசு சாரா இந்திய அமைப்புகள் போராடிவரும் நிலையில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இப்படி முறைகேடாக நடந்துக்கொள்வது மிக வேதனையாக இருக்கின்றது. அதோடு, அந்த ஆசிரியர் வேலை செய்யும் பள்ளிக்கு பெண் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்களுக்கு எப்படி மனம் வரும்?

இத்தணைக்கும் அவர் ஏற்கனவே இத்தகைய முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர் மீது கல்வியமைச்சு ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியலை தொடர்பு கொண்ட போது, அவரும் இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதை உறுதி செய்துள்ளார். தொடக்கக்கட்ட நடவடிக்கையாக வாட்சாப்பில் பரவிய அந்த உரையாடலை அந்த சர்ச்சைகுரிய ஆசிரியர் வேலை செய்துவரும் ஹோப்புல் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் மொழி பெயர்த்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவில் ஒப்படைத்துள்ளார்.

அதேவேளையில், இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் போலீசில் புகார் அளித்ததற்கான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. அவர்கள் பற்றிய தகவல்களும் இன்னும் தெரியவில்லை. எனினும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதாக இக்குற்றச்சாட்டு உண்மையானால் கடுமையான நடவடிக்கையை கல்வி அமைச்சு எடுக்கும் என டேனியல் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன