வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ம.இ.கா. தலைவர்களின் எதிர்ப்பால் கட்சியிலிருந்து விலகினார் இந்திய ஆசிரியர்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ம.இ.கா. தலைவர்களின் எதிர்ப்பால் கட்சியிலிருந்து விலகினார் இந்திய ஆசிரியர்!

பெஸ்தாரி ஜெயா, அக்.31-

இந்திய பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு வழங்கிய ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் ஸ்ரீ சாஹாயா கிளையின் தலைவருமான நடராஜா எனும் நபர் இன்று ம.இ.கா.விலிருந்து விலகினார்.

சம்பந்தப்பட்ட பெண்ணை படுக்கைக்கு அனுப்பி வைக்கும்படி அவர் அந்த பெண்ணின் அம்மாவிடம் தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த அப்பெண்ணின் அம்மா செய்வதறியாது சிலரது உதவியை நாடினார். அதன் பின்னர் அப்பெண்ணின் தாயாரிடம் அந்த ஆசிரியர் பேசும் தொலைப்பேசியில் பேசும் உரையாடல்கள் வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் பெரும் வைரலானது.

சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக பலர் தங்களின் அதிருப்தியை கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த ஆசிரியர் ம.இ.கா.வை சேர்ந்தவர் என்பதால் இவ்விவகாரம் கடுமையாக சூடு பிடித்தது.

இந்நிலையில், இன்று ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் அந்த ஆசிரியரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகின்றது. அதன் பின்னர், தன் குற்றங்களை ஒப்புக்கொண்ட அந்த ஆசிரியர் கட்சியிலிருந்து விலகுவதாக கோலசிலாங்கூர் தொகுதி தலைவர் குமாரசாமி முன்னிலையில் தன் கைப்பட எழுதி கையொப்பமிட்டு கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணும் தாயாரும் போலீஸ் புகார் அளித்தார்களா என்பது தெரியவில்லை. ஆயினும், இது குறித்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ஆசிரியர் மீது கல்வியமைச்சு என்ன நடவடிக்கையை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன