புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வாழ்க்கைச் செலவினம் உயர்வுக்கு ஜிஎஸ்டியே முழுக்காரணம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வாழ்க்கைச் செலவினம் உயர்வுக்கு ஜிஎஸ்டியே முழுக்காரணம்!

ஷா ஆலம், நவ. 4-
மாநில அரசு மற்றும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் கருத்தில் கொண்டே சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி 2018ஆண்டுக்கான சிலாங்கூர் 2018 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சி மீதான தாக்குதல்களுக்கு இடையே, வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் துன் ரசாக் போல் இல்லாமல், அது வேறு மாதிரியானது என வர்ணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நேற்று பிற்பகல் ஷா ஆலமில் உள்ள மாநில சட்டமன்றத்தில், வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, ஜிஎஸ்டி-யைத் தொட்டுப் பேசி மத்திய பட்ஜெட்டை அவர் விமர்சித்தார். அக்டோபர் 27-ஆம் தேதி தனது பட்ஜெட் தாக்கலின்போது, அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் தாய் என 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நஜீப் குறிப்பிட்டதை அஸ்மின் நினைவு கூர்ந்தார்.

அந்த நேரத்தில், அரசாங்கத்தின் 2018 பட்ஜெட்டை நஜீப் மிக மிக விரிவானது, வெற்றிகரமானது என்று விவரித்தார். இருப்பினும், அஸ்மின் அதனை மறுத்ததோடு, மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் உயர்வைக் கையாள 2018 வரவு செலவுத் திட்டம் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். பொருள்களின் விலை ஏற்றம், மக்களுக்குச் சுமையாக இருக்கிறது, வாழ்க்கை செலவினங்கள் உயர பொருள் மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) ஒரு காரணமாகும் என குறிப்பிட்டார்.

அனைத்து பட்ஜெட்டுகளின் தாயாலும் கையாள முடியாத, வாழ்க்கைச் செலவினங்களின் தாய் இந்த ஜிஎஸ்டி என அவர் வர்ணித்தார். நம்பிக்கை கூட்டணி பொருள் மற்றும் சேவை வரிக்குப் பதிலாக, விற்பனை மற்றும் சேவை வரியை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 25இ-ல், நம்பிக்கை கூட்டணியின் நிழல் வரவு-செலவுத் திட்டத்தில் விற்பனை மற்றம் சேவை வரியை மீண்டும் கொண்டு வருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன