ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மறைப்பதற்கு ஒன்றுமில்லை! நஜீப்பை விடாது துரத்தும் துன் மகாதீர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மறைப்பதற்கு ஒன்றுமில்லை! நஜீப்பை விடாது துரத்தும் துன் மகாதீர்!

பெட்டாலிங் ஜெயா, நவ. 4-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தம்முடன் பொது விவாதத்தை நடத்த முன்வர வேண்டுமென துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் சவால் விடுத்துள்ளார். மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில், பிரதமர் நஜீப் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மீது நடத்திய மறைமுகத் தாக்குதல்களை மேற்கோள் காட்டியதோடு, அத்தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் மகாதீர் அவரது வலைத்தளப் பதிவில் நேற்று மாலை பதில் அளித்திருந்தார்.

அந்தக் கட்டுரையில் மகாதீரின் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு குறிப்பிட்ட தலைவர் ஓர் ஊடகத்தைப் பயன்படுத்தி தமது சுயநல அரசியல் இலாபத்திற்காகப் போலியான செய்திகளைப் பரப்புவதோடு நாட்டைப்பற்றிப் பொய்களையும் சொல்கிறார் என்று நஜீப் கூறியிருந்தார். இதற்கு மகாதீர், பொய்யானவை என்பவற்றை நஜீப் நிரூபிக்க வேண்டும் என்று கோரியதோடு அரசாங்கம் எப்படி உள்ளூர் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன் என்பதை விளக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.

மலேசியாவில் அச்சகம் மற்றும் மின்னஞ்சல் ஊடகங்களை அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1எம்டிபி மற்றும் நஜீப்பின் வங்கிக் கணக்கில் இருக்கும் வெ. 2.6 பில்லியன் நிதி பற்றி நாடாளுமன்றம் கூட விவாதிக்க முடியாத நிலை உள்ளது. இவை பற்றி அம்னோ மாநாடு மௌனமாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. என் வாழ்நாள் முழுவதும் வெளிநாட்டினருடன் தொடர்பு வைத்திருக்கிறேன். வெளிநாட்டினர் நாட்டைப் பற்றிக் கேட்கும்போது, நான் என்னையே தணிக்கை செய்துகொள்ள வேண்டுமா? நான் சொன்னவை எல்லாம் போலியானது என்று நிரூபியுங்கள். மறைப்பதற்கு ஒன்றுமில்லை நடத்துவோம். அதில் நிரூபியுங்கள் என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2015 இல் மறைப்பதற்கு ஒன்றுமில்லை 1நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க நஜீப் அழைக்கப்பட்டிருந்தார். நஜீப் தயாரானார் என்றும் ஆனால், போலீஸ் அவரைத் தடுத்துவிட்டது என்றும் கூறப்பட்டது. 2017 ஆகஸ்டில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஷா அலாமில் நடத்துவதற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள நஜீப்புக்கு மகாதீர் அழைப்பு விடுத்திருந்தார். அது நடந்து கொண்ருந்தபோது, ஷா அலாம் மண்டபத்தில் அமளி ஏற்பட்டது. அந்நிகழ்ச்சி பிற்பகல் மணி 3.00க்குத் தொடங்கியது. மாலை 5.30 மணியளவில், மகாதீர் பேசிக் கொண்டிருக்கையில் அதில் பெரும் குளப்பம் உருவாக்கப்பட்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன