வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > டோட்டேன்ஹம்மை காப்பாற்றினார் சோன்!
விளையாட்டு

டோட்டேன்ஹம்மை காப்பாற்றினார் சோன்!

லண்டன், நவ.6 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 -0 என்ற கோலில் கிறிஸ்டல் பேலசை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் ஒரே கோலை தென் கொரியாவின் சோன் ஹியுங் மின் போட்டார்.

புதன்கிழமை ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ரியல் மெட்ரிட்டை வீழ்த்திய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், கிறிஸ்டல் பேலசுக்கு எதிராக அதிரடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் முன்னணி நட்சத்திரம் டெலி அலி, காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்காததால், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் சோன் ஹியூங் மின் போட்ட கோல் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 23 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன