சென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் சென்றார். மேலும் மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

மேலும் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மோடியை வரவேற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.