அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: 27 பேர் பலி
உலகம்

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: 27 பேர் பலி

இஸ்லாமாபாத், நவ 9-

பாகிஸ்தான், கல்லார் காகர் பகுதியில் நேற்று இரவு பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர்.

ராய்விண்டில் நடைபெறவிருந்த மத பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று 100க்கும் மேற்பட்டோர் அந்தப் பேருந்தில் சென்றுள்ளனர்.  பேருந்து இஸ்லாமாபாத்-லாகூர் சாலை வழியாக செல்வதாக இருந்தது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததாலும் இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டதால் அந்தச் சாலை மூடப்பட்டது.

எனவே,  ஓட்டுநர் வேறு வழியாக சென்றுள்ளார்.  அவருக்கு அந்த பாதை பழக்கம் இல்லாததால் அங்கு பள்ளம் இருப்பதை கவனிக்கவில்லை. அந்த பகுதியில் இருந்த சரிவில் மிக வேகமாக செல்லும் போது ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன