அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > விரைவில் கைது நடவடிக்கை – டத்தோ சுல்கிப்ளி
முதன்மைச் செய்திகள்

விரைவில் கைது நடவடிக்கை – டத்தோ சுல்கிப்ளி

புத்ராஜெயா, ஜூலை.20 –

இங்கிலாந்தின் லண்டன் நகரில், பெல்டா முதலீட்டு நிறுவனம் ( எப்.ஐ.சி ) வாங்கிய ஹாட்டல் விவகாரம் தொடர்பில் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என அவர் சொன்னார்.

எனினும் அந்த கைது நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற தகவலை வெளியிட டத்தோ சுல்கிப்ளி மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்படவிருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பதவிகள் குறித்து கருத்துரைக்க சுல்கிப்ளி மறுத்து விட்டார்.

கைது நடவடிக்கைக்குப் பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் மேல் விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். தேவைப்பட்டால் விசாரணைக்காக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

2013 , 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனின் , கென்சிங்டன் நகரில்  அசல் விலையைக் காட்டிலும் கூடுதல் விலையில் பெல்டா முதலீட்டு நிறுவனம் ஹாட்டல் ஒன்றை வாங்கியதல் லட்சக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன