`வேலைக்காரன்’ படத்தின் முக்கிய தகவல்

0
21

சென்னை, நவ 13-

சமூக பிரச்சையை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்’.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்..

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..