திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > ஈரான்-ஈராக்கில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை உயர்வு
உலகம்

ஈரான்-ஈராக்கில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை உயர்வு

டெஹ்ரான், நவ 14-

ஈரான்- ஈராக் ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை400 பேர் பலியாகியுள்ளனர்.

பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பலத்த நில அதிர்வு காரணத்தால் 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் ஈரானில் 380 பேரும், ஈராக்கில் 20 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 6,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன