செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி
உலகம்

நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி

அபுஜா, நவ 22-
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அடமாவா மாநிலத்தின் முபி நகரில் மசூதிக்குள் இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்தான். தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதோடு அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன