பார்சிலோனா,  நவ.25 –

ஐரோப்பிய மண்டலத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரருக்கான தங்க காலணி விருதை பார்சிலோனாவின் லியோனெல் மெஸ்சி பெற்றிருக்கிறார். 30 வயதுடைய மெஸ்சி நான்காவது முறையாக அந்த விருதைப் பெறுகிறார். கடந்த பருவத்தில் அவர் பார்சிலோனா அணியுடன் லா லீகா போட்டியில் 37 கோல்களைப் போட்டிருந்தார்.
போர்ச்சுகல் லீக்கின் ஸ்போர்டிங் லிஸ்பன் அணியைச் சேர்ந்த பாஸ் டோஸ்ட் ( 34 கோல்கள் ), பொருசியா டார்ட்மூண்ட் கிளப்பைச் சேர்ந்த பியேரி அபுமேயாங் ( 31கோல்கள் ) பின்னுக்கு தள்ளி மெஸ்சி இந்த விருந்தைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் 2010, 2012, 2013 ஆம் ஆண்டுகளிலும் மெஸ்சி தங்க காலணி விருதை வென்றார். இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்சி சமன் செய்துள்ளார்.ரியல் மெட்ரிட்டின் ரொனால்டோ, 2008, 2011,2014,2015 ஆம் ஆண்டுகளில் தங்க காலணி விருதை வென்றுள்ளார்.