கோமாளிகளின் சவால்களுக்கு பதில் அளிக்க கூடாது – டத்தோ சிவராஜ்

0
5

கோலாலம்பூர், நவ.25 –

“செத்த பாம்பை புதைக்கனுமே அன்றி பால் ஊற்ற கூடாது, கோமாளிகளின் சவாலுக்கு பதிலளிக்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன் நான்.” என  மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எம். கேவியசின் சவாலுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தைரியம் இருந்தால் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நானே வேட்பாளர் என அறிவிக்கமாறு கேவியஸ் , சிவராஜூக்கு சவால் விடுத்திருந்தார். அவரின் சவாலுக்கு தாம் பதில் அளிக்க விரும்பவில்லை என சிவராஜ் முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பிலான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் சிவராஜ் நேற்றைய தினம் முகநூலில் படம் ஒன்றை பதிவேற்றம் செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த முகநூல் பதிவில் ம.இ.கா இளைஞர் பிரிவினரும் , மைபிபிபி இளைஞர் பிரிவினரும் தொடர்ந்து வாதம் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.