இந்திய சமூகத்தின் உருமாற்றத்திற்கு வித்திடுபவர்கள் தமிழ் ஆசிரியர்கள் – டத்தோ சரவணன்

0
10

கோலாலம்பூர், நவ.25 –

அரசியல் ரீதியாக பிளவுபட்டு இருக்கும் சமுதாயத்தை ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கச் செய்து முன்னேற்றகரமான இலக்கிற்கு கொண்டுச் செல்லும் ஆற்றலும் சக்தியும் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள் கைகளில் தான் உள்ளது என இளைஞர் விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம் . சரவணன் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் காலத்திற்கு ஏற்ற வகையில், பொருளாதார சிந்தனையுடைய சமுதாயமாகவும் இந்திய சமுதாயம் உருமாற்றம்  பெற வேண்டும் என சரவணன் கேட்டு கொண்டுள்ளார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் கோலாம்பூர், பிளட்சர் தமிழ்ப்பள்ளியில் தமிழக பேராசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில்  தலைமையேற்று தலைமையுரை ஆற்றியபோது டத்தோ எம்.சரவணன் இதனைத் தெரிவித்தார்.

‘நமது கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் இந்த மண்ணில் தொடர்ந்து காக்கப்படவேண்டும்’

தமிழ் நாட்டுக்கும் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. அது மறைக்க மறுக்க முடியாத வரலாற்றுப் புதினம்’

‘தமிழ் சான்றோர்கள், உணர்வாளர்கள் மற்றும் நமது உறவுகள் வாயிலாக பல நூற்றாண்டுகள் அந்த இனிய பந்தம் நீளும்’.

‘தமிழ்க் கல்வி இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றை மேன்மையுறச் செய்வோம். இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி. மொழியின்றி சிந்தனை இல்லை.தமிழை காப்போம். நலம் வளர்ப்போம் என சரவணன் கூறினார்.