அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > டெல்லிக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
இந்தியா/ ஈழம்

டெல்லிக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

ஜம்மு, நவ 26-
காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் போதைப்பொருளை ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டபோது ஆப்பிள் பழப் பெட்டிக்குள் 8 கிலோ எடைக்கொண்ட போதைப் பொருள் பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்தப் போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன