முகப்பு > முதன்மைச் செய்திகள் > இரண்டு அமைச்சுகளை விசாரணைக்கு அழைக்கிறது தேசிய பொது கணக்கு குழு!
முதன்மைச் செய்திகள்

இரண்டு அமைச்சுகளை விசாரணைக்கு அழைக்கிறது தேசிய பொது கணக்கு குழு!

கோலாலம்பூர், நவ.27-

தேசிய கணக்காய்வாளரின் இரண்டாம் கட்ட அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டதை அடுத்து தேசிய பொது கணக்கு குழு இரண்டு அமைச்சுகளை விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.

இளைஞர், விளையாட்டு அமைச்சு மற்றும் புறநகர் , வட்டார மேம்பாட்டு அமைச்சும் விசாரணைக்கு அழைக்கப்படும் என தேசிய பொது கணக்கு குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஹசான் அரிபின் தெரிவித்துள்ளார்.

தேசிய கணக்காய்வாளரின் அறிக்கையின்படி சில அமைச்சுகள், அரசாங்கத் துறைகளில் இன்னமும் பலவீனம் காணப்படுவதாக அவர் கூறினார்.

எனினும் முதல் கட்டமாக அந்த இரண்டு அமைச்சுகளும் அழைக்கப்பட விருப்பதாக ஹசான் அரிபின் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன