வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இசைக் கலைஞருக்கு வெ.13 ஆயிரம் உதவி நிதி
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

இசைக் கலைஞருக்கு வெ.13 ஆயிரம் உதவி நிதி

பெட்டாலிங் ஜெயா, நவ. 28-

என்றும் இனிமை – 4 கலைநிகழ்ச்சியின் வழி கிள்ளானைச் சேர்ந்த கலைஞர் தமிழ்ச்செல்வம் கருப்பையா என்பவருக்கு 13,000.00 வெள்ளி உதவி நிதி வழங்கப்பட்டது எனக் கலைநிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டி. மேரி தாஸ் கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு சிறிய குழுவை அமைத்து நன்கொடையாளர்களை ஒன்றிணைத்தோம். ஃபொம்கா தலைவர் டத்தோ மாரிமுத்து, சதீஷ் நாயர், டத்தோ ஏண், டத்தோ அசோக், பவுல், ஐயப்பன், முருகு சுப்ரமணியம் ஆகியோருடன் பிஜே கிளப் நிர்வாகமும் எங்களுடன் இணைந்துக் கொண்டது.

உதவி புரிய வேண்டும் என்ற நல்நோக்கில் எங்களுடன் இணைந்த பிரமுகர்கள் கடந்த 2013 தொடங்கி 2017 வரை மிகப் பெரிய உதவியை வழங்கி வருகின்றனர். இம்முறை, உள்நாட்டுக் கலைஞரான தமிழ்ச்செல்வம் கருப்பையாவுக்கு உதவி நிதி வழங்கப்பட்டது.

58 வயதான இவர் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் முறையாக வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. 11, 15, 17 வயதுடைய மூன்று பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் தவிக்கும் இவரை அடையாளம் கண்டு இந்நிதியை வழங்கியது மகிழ்ச்சியாக இருப்பதாக நன்கொடையாளர்கள் கூறினர்.

பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள பிஜே கிளப்பில் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆடல், பாடல், எம்ஜிஆர் சுரேசின் அபிநயம் ஆகியவை நிகழ்ச்சியை மெருகூட்டின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன