முகப்பு > விளையாட்டு > ஸ்பெயின் கோப்பா டெல் ரே – இறுதி 16 கிளப்புகள் சுற்றில் கால் பதித்தது ரியல் மெட்ரிட்!
விளையாட்டு

ஸ்பெயின் கோப்பா டெல் ரே – இறுதி 16 கிளப்புகள் சுற்றில் கால் பதித்தது ரியல் மெட்ரிட்!

மெட்ரிட், நவ.29- 

ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியில் இறுதி 16 கிளப்புகள் பங்கேற்கும் சுற்றுக்கு ரியல் மெட்ரிட் தகுதிப் பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் , ஸ்பெயினில் மூன்றாவது டிவிஷனில் விளையாடும் ஃபியூன்லப்ராடா அணியுடன் 2 – 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டது.

எனினும் முதல் ஆட்டத்தில் 2 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த ரியல் மெட்ரிட் 4 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேரத் பேல், ரியல் மெட்ரிட்டின் வெற்றிக்கு முக்கிய பங்கை ஆற்றினார்.

சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஃபியூன்லப்ராடா அணியின் லுவிஸ் மில்லா முதல் கோலைப் போட்டு ரியல் மெட்ரிட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.எனினும் இரண்டாம் பாதியில் கேரத் பேல் மாற்று ஆட்டக்காரராக நுழைந்தப் பின்னர், ரியல் மெட்ரிட் போர்ஜா மயோரல் மூலம் இரண்டு கோல்களைப் போட்டது.

அதில் போர்ஜாவின் இரண்டாவது கோலுக்கு கேரத் பேல் அற்புதமாக பந்தை தட்டி கொடுத்தார். ஃபியூன்லப்ராடா அணிக்கு அல்வாரோ போர்த்திலோ ஒரு கோலைப் போட்டிருந்தாலும் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன