வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அரசாங்கத்தை குறை கூறாதீர்! டத்தோஸ்ரீ தேவமணி கோரிக்கை
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அரசாங்கத்தை குறை கூறாதீர்! டத்தோஸ்ரீ தேவமணி கோரிக்கை

சுங்கை பட்டாணி, நவ. 29-
இந்திய சமூகத்தின் மேன்மைக்காக அரசாங்கம் பல்வேறு வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆகையால், இந்தியர்களின் நலம் பேணும் அரசாங்கத்தை இந்தியர்கள் குறைக்கூறக்கூடாது என பிரதமர்துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ். கே தேவமணி வலியுறுத்தினார்.

முக்கியமாக அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள இந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்தியர்கள் அறிந்திருப்பதோடு அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். நாட்டின் மேம்பாட்டு நீரோட்டத்தில் எந்த நபரும் பின் தங்கிவிடமால் இருப்பதை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும் உறுதி செய்யும்.

குறிப்பாக, 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய ஒதுக்கீட்டை செய்துள்ளது. பிரிம், தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கான நிதி, பங்குரிமையை வலுப்படுத்தும் அம்சங்கள், தொழில்முனைவர் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் உட்பட ஒரே மலேசியா உதவி நிதி குறித்த அறிவிப்புகளும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து மக்களில் பலர் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அரசாங்கம் தங்களுக்கு வழங்கி வரும் நன்மைகளை அறிந்திருக்காத நிலையில், அதனை அவர்கள் முழுமையாக அனுபவிக்கவும் முடியாத நிலை உருவாகியுள்ளது. தங்களின் அறியாமையால், பல சலுகைகளை மக்கள் இழந்து வருகின்றனர்.

எனவே, அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்கும் வாய்ப்புக்களையும் வசதிகளையும் அறிந்து கொண்டு அதனை முழுமையாகப் பயன்படுத்தி நன்மையடைய மக்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என தேவமணி வலியுறுத்தினார். அதை விடுத்து சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான வதந்திகளையும் அவதூறுகளையும் நம்பி ஏமாற வேண்டாம் என தேவமணி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன