கோவா நவ- 29

”பூ” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை பார்வதிக்கு இன்று இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான வெள்ளிமயில் விருது நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘டேக் ஆப்’ என்கிற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகை பார்வதி தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அவரின் அழுத்தமான கதாப்பத்திரங்கள் பார்வதியை  தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுகு, மலையாள சினிமாக்ளிலும் மிளிர வைத்தன.

கோவாவில் தற்போது 2017ஆம் வருடத்திற்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் பல மொழிகளில் தயாரான படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன.

அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கேரள நர்ஸ்கள் அங்கே உள்நாட்டு யுத்தத்தின் போது சந்தித்த அவலங்களை தனது அருமையான நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி. அதுமட்டுமல்ல, இந்த டேக் ஆப் படத்திற்கு சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதும் வழங்கப்பட்டுள்ளது.