புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி போனஸ் தொகை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி போனஸ் தொகை!

கோம்பாக், நவ.30-
சிலாங்கூர் அரசாங்க ஊழியர்களுக்கு மாநில நிதி உதவியான போனஸ் தொகை டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வழங்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். அதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை சம்பந்தப்பட மாநில அரசின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மாநில அரசாங்க அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட போனஸ் தொகையை டிசம்பர் 21ஆம் தேதி வழங்கும்படி தாம் உத்தரவிட்டிருப்பதாக நேற்று சுங்கை பூசுவில் டத்தாரான் கோம்பாக் உத்தாராவில் கோம்பாக் நாடாளுமன்ற அளவில் நடைபெற்ற பெடூலி ராக்யாட் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சொன்னார்.

கடந்த 3ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சிலாங்கூரின் அடுத்தாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பு நிதி அல்லது மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் என அஸ்மின் அலி அறிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதத்தில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இரண்டு மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் மீதமுள்ள ஒரு மாத சம்பள தொகை டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. மாநில பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நேர்மையாகவும் பொறுப்பாகவும் பணியாற்றிவரும் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த உதவிநிதி வழங்கப்படுகின்றது. மாநில அரசாங்கம் அதன் பொதுச்சேவை ஊழியர்களுக்கு சமூகநல கொள்கையை அமல்படுத்தியதிலிருந்து புத்ராஜெயாவிலுள்ள பொதுச்சேவை ஊழியர்கள் மாநில அரசாங்கத்தில் வேலை செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறுந்தகவல், கடிதம், மின்னஞ்சல் ஆகியவற்றின் வாயிலாக எனக்கு கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

ஆயினும், தற்போது மாநிலத்தில் பொதுச்சேவை ஊழியர்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக உள்ளது. அதனால், அவர்கள் அனைவரும் புத்ராஜெயாவிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். காரணம், பொதுத்தேர்தலுக்கு பிறகு நாங்கள் சிலாங்கூரிலிருந்து புத்ராஜெயாவிற்கு மாறிவிடுவோம் என டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன