வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சூரியாவின் தானா சேர்ந்த கூட்டம் டீசர்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சூரியாவின் தானா சேர்ந்த கூட்டம் டீசர்

தளபதி விஜய், தல அஜித்திற்குப் பிறகு அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகரான சூரியா விளங்குகின்றார். அவரின் நடிப்பில் இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சிங்கம் 3 திரைப்படம் வெளியீடு கண்டு வெற்றி பெற்றது.

அவரின் அடுத்த திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தின் சூரியா நடிக்கும் திரைப்படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் இன்று மலேசிய நேரப்படி 9.30க்கு வெளியிடப்பட்டது.

இதில் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரியாக சூரியா நடிக்கிறார். அவரோடு, கார்த்திக் நம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், செந்தில் என ஒரு நடிகர்கள் பட்டாளமே இத்திரைப்படத்தில் களமிறங்கியுள்ளது. படத்தின் டீசரை பார்க்கும் போது, பொங்கல் பண்டிகையின் போது, சூரியா அதிரடி படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன