கிளாந்தானில் வரலாறு காணாத வெள்ளம்: 14,000 பேர் பாதிப்பு

0
6

கோத்தா பாரு, டிச 1-

கிளந்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால்  14,000க்கும் மேற்பட்டோர்  வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாத மழையின் காரணத்தால் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதால் மக்கள் வீடுகளிலிருந்து    வெளியேறித் துயர் துடைப்பு   மையங்களில்     தஞ்சம்   புகுந்துள்ளனர்.

நேற்று     13,873    ஆக     இருந்த   துயர்துடைப்பு   மையங்களில்    தஞ்சமடைந்தவர்   எண்ணிக்கை   இன்று   காலை 14,237 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள்  கோத்தா     பாரு,   பாசிர்   மாஸ்,   தும்பாட்,  தானா   மேரா,    பாசிர்    பூத்தே,  குவா   மூசாங்    ஆகிய மாவட்டங்களில்    உள்ள    63   துயர்துடைப்பு    மையங்களில்     தங்கியுள்ளனர்.