அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > விருப்பமின்றி கட்சியின் மறுதேர்தலுக்குத் தயாராகிறது ஜசெக 
முதன்மைச் செய்திகள்

விருப்பமின்றி கட்சியின் மறுதேர்தலுக்குத் தயாராகிறது ஜசெக 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21-

ஜசெக மறுதேர்தலை நடத்த வேண்டுமென்ற சங்கங்களின் தலைமை இயக்குநரின் உத்தரவை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லாவிட்டாலும், அதன் செயலவை கட்சியின் மத்திய செயலவைக்கான (சிஇசி)க்கு மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது.  14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில், இந்த ஆர்ஓஎஸ்ஸின் உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜசெக விருப்பமில்லாமலேயே அதன் மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது.

அதேவேளை, இந்த விவகாரத்தில் ஆர்ஓ எஸ்ஸுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்கும் எங்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அதன் உதவித் தலைவர் தெரேசா கோக் குறிப்பிட்டார்.  நேற்று புத்ரா ஜெயாவில் ஆர்ஓஎஸ்ஸிடம் ஜசெக அளித்த கடிதத்தின் உள்ளடக்கத்தை அவர் செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.

மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டு ஆர்ஓஎஸ் ஜூலை 17-இல் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஜசெக அக்கடிதத்தை தாக்கல் செய்துள்ளது.  ஆர்ஓஎஸ்ஸின் அதிகாரி முகமட் நவாவி மாட் அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன